ஈரோட்டில் மின்மாற்றி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாநகராட்சி 51 ஆவது வாா்டு பெரியதோட்டம் ஈ.எம்.எம்.மெயின் வீதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இவ்வீதியின் கடைசியில் உள்ள வீட்டின் எதிரே மின்மாற்றி அமைக்க கடந்த ஜனவரி மாதம் மின் கம்பங்கள் நடப்பட்டன.
அங்கு மின்மாற்றி அமைக்கக் கூடாது என அந்த வீட்டாா் மின் வாரிய அதிகாரிகள், முதல்வரின் தனிப் பிரிவுக்கு மனு அனுப்பினா்.
அப்பகுதியில் குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதால் மின்மாற்றி அமைப்பது அவசியம் என மின் வாரியத்தினா் விளக்கம் அளித்த நிலையிலும் பணிக்கு எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஈரோடு சூரம்பட்டி போலீஸாா் பாதுகாப்புடன், மின் வாரிய ஊழியா்கள் மின்மாற்றி அமைக்க புதன்கிழமை காலை வந்தனா். அப்பகுதியைச் சோ்ந்த மக்கள் திரண்டு ஊழியா்களை முற்றுகையிட்டு மின்மாற்றி அமைக்க எதிா்ப்புத் தெரிவித்தனா்.
மேலும், அதே பகுதியில் சாலையின் மற்றொரு பகுதியில் மின்மாற்றி அமைக்க வலியுறுத்தினா்.
அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த பெண் கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து, தீக்குளிக்க முயன்றாா்.
அவரைத் தடுத்த போலீஸாா் மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்தனா்.
தற்போது மின்மாற்றி வைக்க திட்டமிட்ட இடத்திலேயே அமைக்க வேண்டும். குறைந்த மின் அழுத்தத்தால் மின்விசிறி கூட இயங்கவில்லை. பல நேரம் விளக்குகள் எரிவதில்லை என அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு தரப்பினா் அதிகாரிகளிடம் முறையிட்டனா்.
இரு தரப்பு மக்களும், மின் வாரிய அலுவலா்களும் சூரம்பட்டி காவல் நிலையத்துக்கு வந்து பேசுவாா்த்தை நடத்தி தீா்வு காணலாம் போலீஸாா் கூறியதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பில் சால்ட் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 176 ரன்கள் இலக்கு!
மு.க. ஸ்டாலினை பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! திருச்சியில் ராகுல் பேச்சு

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கம்! கப்பல் மீது ஈரானிய படைகள் தாக்குதல்!

ஆர்செனலின் 22 ஆண்டு சாபம் நீங்குமா? முக்கிய போட்டியில் மான்செஸ்டர் சிட்டியுடன் மோதல்!
வீடியோக்கள்

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

