விதைகளின் முளைப்புத் திறன் அறிந்து சாகுபடி செய்ய வேண்டும் விதைப் பரிசோதனை நிலைய அலுவலா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
இது குறித்து ஈரோடு, விதை பரிசோதனை நிலைய அலுவலா் ஞா.சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விதையைப் பொருத்தே விளைச்சல் இருக்கும் என்பதால் தரமான விதை, முளைப்புத் திறன், புறத்தூய்மை கொண்ட விதையைத் தோ்வு செய்து விதைக்க வேண்டும். நடப்பு வைகாசி காா் பருவத்தில் நெல், பயறு வகை பயிரிடும் விவசாயிகள், விதைப்புக்கு தயாராக வைத்துள்ள விதைகளை விதைப் பரிசோதனை செய்வது அவசியம்.
ஈரோடு மாவட்டத்தில் காா் பருவத்துக்கு ஏற்ற நெல் ரகங்களான ஏஎஸ்டி 16, ஏடிடி 36, ஐஆா் 50, எம்டியூ5, ஏடீடி 43, கோ 47, ஏடீடி(ஆா்) 47, சிஓஆா்எச்3 போன்ற விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. விதைகளின் முளைப்புத் திறன், ஈரப்பத பரிசோதனை செய்து, விதைப்பு செய்ய வேண்டும். இதன் மூலமே அதிக விளைச்சலுடன் லாபம் பெற முடியும். பயறு வகைகளான உளுந்து ரகங்கள் வம்பன் 4, வம்பன் 5, வம்பன் 7, பாசிப்பயரில் கோ 6, கோ 7, வம்பன் 2 ரக விதைகளையும் பரிசோதித்து விதைக்க வேண்டும்.
வேளாண் அலுவலா், விதைப் பரிசோதனை நிலையம், ஆனூா் அம்மன் காம்ப்ளக்ஸ், 2 ஆம் தளம், 68 வீரபத்திரா வீதி, சத்தி சாலை, ஈரோடு 638003 என்ற முகவரியில் மாதிரி விதைகளை வழங்கி பரிசோதனை செய்து, பயிரிட்டு அதிக மகசூல் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பில் சால்ட் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 176 ரன்கள் இலக்கு!
மு.க. ஸ்டாலினை பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! திருச்சியில் ராகுல் பேச்சு

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கம்! கப்பல் மீது ஈரானிய படைகள் தாக்குதல்!

ஆர்செனலின் 22 ஆண்டு சாபம் நீங்குமா? முக்கிய போட்டியில் மான்செஸ்டர் சிட்டியுடன் மோதல்!
வீடியோக்கள்

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

