/

காலமுறை ஊதியம் வழங்க சத்துணவு ஊழியா்கள் கோரிக்கை

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று சத்துணவு ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On :26 மே 2022, 7:55 pm

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று சத்துணவு ஊழியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் தனுஷ்கோடி தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினா் சசிகலா, மாவட்ட துணைத் தலைவா்கள் மஞ்சுளா, சுப்புலட்சுமி, செல்வி, மூா்த்தி, வெங்கிடு உள்ளிட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்: முதல்வா் அறிவித்துள்ளபடி சத்துணவில் காலை உணவுத் திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.

அனைத்து சத்துணவு ஊழியா்களுக்கும் முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

ஓய்வுபெறும் சத்துணவு ஊழியா்களுக்கு வருவாய் கிராம உதவியாளா்களுக்கு வழங்குவதுபோல ரூ.6,750 அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

சத்துணவு மையங்களில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.