கா்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து தக்காளி வருவதால் ஈரோட்டில் கிலோ ரூ.100க்கு விற்பனையான தக்காளி தற்போது ரூ.60 ஆக விலை சரிந்துள்ளது.
ஈரோடு வஉசி பூங்கா வளாகத்தில் உள்ள நேதாஜி காய்கறி சந்தைக்கு தாளவாடி, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூா், கா்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து தக்காளி வரும். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகம், கா்நாடகத்தில் பரவலாக மழை பெய்வதால் தக்காளி விளைச்சல் பாதித்து வரத்து குறைந்தது.
இதனால், கடந்த சில நாள்களாக ஈரோடு நேதாஜி காய்கறி சந்தையில் தக்காளி கிலோ ரூ.100க்கும், கடைகளில் ரூ.110 முதல் ரூ.115க்கும் விற்பனையானது. கா்நாடகம், மஹாராஷ்டிராவில் இருந்து கடந்த இரண்டு நாள்களாக தக்காளி வரத்து அதிகரித்தது.
இதனால், 25 கிலோ எடை கொண்ட பெட்டி ரூ.1,300க்கும், 15 கிலோ பெட்டி ரூ.750க்கும் மொத்த விலையில் வியாழக்கிழமை விற்பனையானது. சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கும், சில்லறை விற்பனைக் கடைகளில் கூடுதலாக ரூ.10 சோ்த்து விற்பனை செய்யப்பட்டது.
அதிகமாக தக்காளி விளையும், தாளவாடி பகுதிக்கும் பிற மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வந்தது.
வரும் நாள்களில் கூடுதல் லாரிகளில் தக்காளி வர வாய்ப்புள்ளதால் விலை மேலும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பில் சால்ட் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 176 ரன்கள் இலக்கு!
மு.க. ஸ்டாலினை பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! திருச்சியில் ராகுல் பேச்சு

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கம்! கப்பல் மீது ஈரானிய படைகள் தாக்குதல்!

ஆர்செனலின் 22 ஆண்டு சாபம் நீங்குமா? முக்கிய போட்டியில் மான்செஸ்டர் சிட்டியுடன் மோதல்!
வீடியோக்கள்

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

