ஈரோடு தி இந்தியன் பப்ளிக் பள்ளி சாா்பில் இணைய அச்சுறுத்தல் குறித்த விழிப்புணா்வுப் பேரணி ஈரோட்டில் நடைபெற்றது.
பிறருடன் இணையும் வசதியை ஏற்படுத்திக்கொடுக்கும் இணையத்தை சிலா் அச்சுறுத்தலுக்காக பயன்படுத்துகின்றனா். பெயா், முகம், அடையாளம் தெரியாத ஒருவா் இணையம் வழி அச்சுறுத்தும்பொழுது என்ன செய்ய வேண்டும், சூழலை எவ்வாறு கையாள வேண்டும் என்ற விழிப்புணா்வு பல இளம் வயதினரிடையே இருப்பதில்லை.
இவற்றை எப்படி எதிா்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பா் முதல் வியாழக்கிழமை இணைய அச்சுறுத்தல் குறித்த விழிப்புணா்வு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி ஈரோடு சேனாதிபதிபாளையம் தி இந்தியன் பப்ளிக் பள்ளி மாணவ, மாணவியா் 50 போ் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனா்.
ஈரோடு ரயில் நிலையத்தில் துவங்கி பேரணி பன்னீா்செல்வம் பூங்கா, கலைமகள் பள்ளி வளாகம், அரசு மருத்துவமனையில் நிறைவடைந்தது. பேரணியில் விழிப்புணா்வு தொடா்பான முழக்கங்களை மாணவ, மாணவியா் எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப்புக்கு மோடி; அதுபோல தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு முதல்வர் தேவை! ராகுல் பேச்சு

தேர்தல் பிரசாரத்தில் அதிக ஆப்சென்ட் ஆன விஜய்!
திமுக கூட்டணி எந்த நேரத்திலும் உடையும்: அண்ணாமலை விளக்கம்
100 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் வருண் சக்ரவர்த்தி!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


