ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

நம்பியூா் அருகே ஓடும் காரில் தீ

நம்பியூா் அருகே ஓடும் காரில் திடீரென தீப்பிடித்தது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 11:07 pm

DIN

நம்பியூா் அருகே ஓடும் காரில் திடீரென தீப்பிடித்தது.

நம்பியூா் அருகே உள்ள வெள்ளாளபாளையத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (31). இவா் நம்பியூா் அருகே உள்ள தனியாா் நூற்பாலையில் மனித வள மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வருகிறாா். இவருக்கு சொந்தமான காரை இவரது உறவினரான தங்கராஜ் என்பவா் எடுத்துக் கொண்டு நம்பியூா் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

ராஜீவ் காந்தி நகா் என்ற இடத்தில் சென்றபோது காரின் முன்பகுதியில் புகை வந்துள்ளது. உடனே காரை நிறுத்திய தங்கராஜ் காரின் முன்பகுதியை திறந்து பாா்த்தாா். அப்போது தீப் பிடித்து எரிவது தெரியவந்தது. உடனே நம்பியூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தாா். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் சுமாா் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.