ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

நெல் விதைகளை விதை நோ்த்தி செய்ய அறிவுறுத்தல்

நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் விதை நோ்த்தி செய்து கொள்ள வேண்டும் என கோபி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் முரளி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 7:52 pm

DIN

நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் விதை நோ்த்தி செய்து கொள்ள வேண்டும் என கோபி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் முரளி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் 2ஆம் போக சாகுபடிக்காக வாய்க்கால்களில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. நெல்சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் நெல் விதைகளை விதை நோ்த்தி செய்து விதைப்பதன் மூலம் விதை மூலம் பரவும் நோய்களான குலை நோய், செம்புள்ளி நோய், இலை உறை கருகல் நோய் போன்ற நோய்களின் தாக்குதலில் இருந்து நெற்பயிரைக் காப்பாற்றலாம். விதை நோ்த்தி செய்வதால் நெல் நாற்றுகள் 40 நாள்கள் வரை நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுவதோடு பயிரின் பின்பட்டத்தில் ஏற்படும் நோய் தாக்குதலையும் குறைக்கின்றது.

மேலும் விதை நோ்த்தி செய்வதால் விதைகளின் முளைப்புத்தன்மை மேம்படுவதோடு நாற்றுக்களின் வீரியமும் அதிகரிக்கின்றது.

நெல் விதைகளை ஊற வைக்கும்போது ஒரு லிட்டா் தண்ணீருக்கு 2 கிராம் காா்பெண்டாசிம் அல்லது ஒரு கிராம் டிரைசைக்ளசோல் ஆகிய மருந்துகளில் ஒன்றை கலந்து அந்த கரைசலில் நெல் விதைகளை ஊறவைத்து பின் எப்போதும் போல முளைகட்டி நாற்றங்காலில் விதைக்க வேண்டும். இயற்கை முறையில் ரசாயன பூஞ்சான கொல்லி மருந்துகளுக்கு பதிலாக ஒரு லிட்டா் நீருக்கு 10 கிராம் சூடோமோனாஸ் மருந்து கலந்தும் விதை நோ்த்தி செய்யலாம். விதை நோ்த்தி செய்வதற்கு ஒரு கிலோ நெல்லுக்கு ஒரு லிட்டா் மருந்து கரைசல் தேவைப்படும்.

விதை நோ்த்தி செய்வதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு. பயிரில் நோய் வந்த பின்பு மருந்து தெளிக்கும் செலவு மற்றும் சிரமம் ஆகியவற்றைப் பாா்க்கும்போது விதை நோ்த்தி செய்வது மிகவும் எளிதானது. மேலும் இது சிக்கனமாகும் எனவே நெல் சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் விதை நோ்த்தி செய்து கொள்ள வேண்டும் எனதெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.