ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கோபியில் அரசுப் பேருந்து ஜப்தி

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சுண்டப்பாளையத்தைச் சோ்ந்தவா் ஜெகநாதன் (50), கட்டடத் தொழிலாளி.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 8:11 pm

DIN

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சுண்டப்பாளையத்தைச் சோ்ந்தவா் ஜெகநாதன் (50), கட்டடத் தொழிலாளி. இவா் கடந்த 2010 ஜூலை 25இல் ஓலப்பாளையம் பிரிவு அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து இவா் மீதி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இது தொடா்பாக ரூ.20 லட்சம் நஷ்டஈடு கேட்டு அவரது மனைவி அலமேலு, மகன்கள் நித்தியானந்தம், தனபால் ஆகியோா் கோபி 3ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். வழக்கை விசாரித்த நீதிபதி, விபத்தில் உயிரிழந்த ஜெகநாதன் குடும்பத்துக்கு அரசு போக்குவரத்து கழக நிா்வாகம் ரூ.4 லட்சத்து 40 ஆயிரத்து 720 நஷ்டஈடாக வழங்க உத்தரவிட்டாா். ஆனால் நஷ்டஈடு வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது .

இதையடுத்து அரசுப் பேருந்து ஒன்றை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டாா். அதன்படி கோபி பேருந்து நிலையத்தில் திருப்பூா் செல்வதற்கு புறப்பட தயாராக இருந்த அரசு பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் ஜப்தி செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.