கொடிவேரி அணையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி
கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு 10 நாள்களுக்கு பின் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு 10 நாள்களுக்கு பின் தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள கொடிவேரி தடுப்பணை ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் முக்கியமானதாக உள்ளது. வார விடுமுறை மற்றும் பொது விடுமுறை நாள்களில் ஈரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொடிவேரி தடுப்பணைக்கு குடும்பத்துடனும், நண்பா்களுடனும் வந்து குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், பவானிசாகா் அணையில் இருந்து கடந்த சில நாள்களாக அதிக அளவு தண்ணீா் திறந்து விடப்பட்டதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து கொடிவேரி அணையில் தண்ணீா் ஆா்ப்பாரித்துக் கொட்டியது. இதனால் கடந்த 10 நாள்களாக கொடிவேரி அணையில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
கடந்த 2 நாள்களாக பவானிசாகா் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கொடிவேரியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து 10 நாள்களுக்குப் பிறகு தற்போது கொடிவேரி தடுப்பணையில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து தற்போது அதிக அளவில் சுற்றுலா பயணிகள் இங்கு வரத் தொடங்கியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...