எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

ஈரோடு மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் தர்னா

ஈரோடு மாநகராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் பொறியியல் துறைகளில் பல ஆண்டுகளாக பணிபுரியும் தற்காலிக துப்புரவு தொழிலாளர்கள் ஈரோடு மாநகராட்சி முன்பு இன்று தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
தர்ணாவில் ஈடுபட்டுள்ள துப்புரவு தொழிலாளர்கள்.
Updated On :31 அக்டோபர் 2022, 9:23 am

DIN

ஈரோடு மாநகராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் பொறியியல் துறைகளில் பல ஆண்டுகளாக பணிபுரியும் தற்காலிக துப்புரவு தொழிலாளர்கள் ஈரோடு மாநகராட்சி முன்பு இன்று தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழக அரசு, புதிதாக தனியார் நிறுவனங்களைக் கொண்டு இத்தகைய பணிகளில் ஆட்கள் நியமிக்க மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது மாநகராட்சியில் 1500 தொழிலாளர்கள் தினக் கூலி அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள். எனவே தனியார் மயமாக்கும் அரசு ஆணையைக் கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. 

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாநகராட்சி மேயர் அலுவலகத்திலும் முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கைகளை மேயர், துணை மேயர் மற்றும் ஆணையரிடம் கூறினர். தனியார் துறை அனுமதிக்கப்பட்டால் இவர்ளது வாழ்வாதாரம் பாதிக்கும், சம்பளம் குறையும், பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அவர்கள் அச்சம் தெரிவித்தனர். முன்பிருந்தது போலவே மாநகராட்சிக்கு கீழ் உள்ள சுய உதவிக் குழுக்கள் மூலம் தங்களது பணியை தொடர அனுமதிக்க வேண்டும். 

மேலும் தாங்கள் பணி நிரந்தரப்படுத்த வேண்டும். அரசு வெளியிட்டுள்ள இப்பணிகளை தனியார் மையமாக்கும் அரசாணை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.