ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கவுந்தப்பாடி அருகே கூலி தொழிலாளி கொலை

கவுந்தப்பாடி அருகே கவுண்டம்பாளையத்தில் கடப்பாரையால் தாக்கி கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்டாா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 7:36 pm

DIN

கவுந்தப்பாடி அருகே கவுண்டம்பாளையத்தில் கடப்பாரையால் தாக்கி கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்டாா்.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலையோரங்களில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கால்வாய் அமைப்பதற்காக கம்பி கட்டும் பணியில் 15 தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

இவா்கள் கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட கவுண்டம்பாளையம் பழனியப்பா நகா் பகுதியில் கூடாரம் அமைத்து தங்கி உள்ளனா். தற்போது, கோபிசெட்டிபாளையம்-அத்தாணி சாலையில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு வேலை முடிந்து திரும்பிய தொழிலாளா்கள் சீட்டு விளையாடியதாக கூறப்படுகிறது. அப்போது, கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே உள்ள அயரோனிபுரம் பகுதியைச் சோ்ந்த சுஷின் (40), மருங்கூா் தாலுகா ராஜாவூா் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (32) ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் அருகில் கிடந்த கடப்பாரையால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சுஷின் உயிரிழந்தாா்.

தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த கவுந்தப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய ரமேஷை தேடி வருகின்றனா். மேலும், சுஷின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.