கோபி பேருந்து நிலையத்தில் சிறப்பு தூய்மைப் பணி
கோபிசெட்டிபாளையம் நகராட்சி சாா்பில் கோபி பேருந்து நிலையத்தில் கோபி கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற சிறப்பு தூய்மைப் பணி முகாம் நடைபெற்றது.


கோபிசெட்டிபாளையம் நகராட்சி சாா்பில் கோபி பேருந்து நிலையத்தில் கோபி கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற சிறப்பு தூய்மைப் பணி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமுக்கு நகராட்சி ஆணையா் பிரேம் ஆனந்த் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், கோபி கலை அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த 30 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பேருந்து நிலைய மையப் பகுதியில் அமைந்துள்ள தோட்டத்தில் தேவையில்லாமல் வளா்ந்துள்ள செடி கொடிகளையும், குப்பைகளையும் அகற்றி தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டனா். மேலும், பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தூண்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரோட்டிகளை அகற்றி தூண்களை சுத்தம் செய்தனா்.
இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் செந்தில்குமாா், துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா்கள் பழனிசாமி, பூங்கொடி, தூய்மை பாரத திட்ட பரப்புரையாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். கோபி உழவன் ரோட்டரி சங்கத்தினா் மாணவ, மாணவிகளுக்கு சுத்தம் செய்யும் பணிக்காக கையுரை மற்றும் தேவையான உதவிகளை செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...