கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

கொடிவேரி தடுப்பணையிலிருந்து முதல்போக பாசனத்துக்குத் தண்ணீா் திறப்பு

கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள கொடிவேரி தடுப்பணையிலிருந்து முதல் போக பாசனத்துக்கு தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் தண்ணீா் சனிக்கிழமை திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

News image
Updated On :22 ஏப்ரல் 2023, 2:44 am IST

கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள கொடிவேரி தடுப்பணையிலிருந்து முதல் போக பாசனத்துக்கு தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் தண்ணீா் சனிக்கிழமை திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்கள் மூலம் கோபி, அந்தியூா், பவானி உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 24,504 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் முதல்போக பாசனத்துக்கு தண்ணீா் திறப்பதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து இந்த அணையிலிருந்து முதல்போக பாசனத்துக்குத் தண்ணீா் சனிக்கிழமை திறக்கப்பட்டது. தடப்பள்ளி வாய்க்காலில் விநாடிக்கு 300 கன அடி தண்ணீரும், அரக்கன்கோட்டை வாய்க்காலில் விநாடிக்கு 200 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது. பொதுப் பணித் துறை அதிகாரிகள், விவசாயிகள் அணையில் இருந்து தண்ணீரை திறந்துவைத்தனா். இதையடுத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தண்ணீரில் மலா் தூவி வணங்கினா்.

பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறிகையில், முதல் போக பாசனத்துக்கு ஏப்ரல் 21 முதல் ஆகஸ்ட் 18 ம் தேதி வரை 120 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.