ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குட்கா விற்பனை: 10 கடைகள் மீது வழக்குப் பதிவு

சத்தியமங்கலம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக 10 கடைகள் மீது சத்தியமங்கலம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 6:30 pm

DIN

சத்தியமங்கலம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக 10 கடைகள் மீது சத்தியமங்கலம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

சத்தியமங்கலம் பகுதியில் போதைப் பாக்குகள் மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து காவல் ஆய்வாளா் முருகேசன் தலைமையில் போலீஸாா் மளிகை, பெட்டி கடைகளில் சோதனையிட்டனா்.

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை, வரதம்பாளையம், கோப்புப்பள்ளம், சிக்கரசம்பாளையம், தாண்டாம்பாளையம், ஆலோத்துக்கோம்பை, கெஞ்சனூா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள மளிகைக் கடை, பெட்டிக் கடைகளில் பதுக்கிவைத்திருந்த ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான புகையிலை, போதைப் பாக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.