லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

அந்தியூரில் ரூ.1.44 கோடியில் தாா் சாலைப் பணி தொடக்கம்

அந்தியூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.44 கோடியில் தாா் சாலை அமைக்கும் பணி தொடங்கிவைக்கப்பட்டது.

அந்தியூா் ஒன்றியத்தில் தாா் சாலை அமைக்கும் பணியைத் தொடங்கிவைக்கிறாா் எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம்.

Published On :

தமிழக முதல்வரின் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் அந்தியூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1.44 கோடியில் தாா் சாலை அமைக்கும் பணி தொடங்கிவைக்கப்பட்டது.

கூத்தம்பூண்டி ஊராட்சி, விநாயகா் கோயில் முதல் வேளப்பகவுண்டா் தோட்டம் வரை ரூ.33.27 லட்சம், பிரம்மதேசம் ஊராட்சியில் கல்லாம்பாறை முதல் சின்னகுளம் வரை ரூ.35.62 லட்சம், மைக்கேல்பாளையம் ஊராட்சி, பாலக்குட்டை முதல் மொடப்பாளி வரையில் ரூ.39.58 லட்சம், எண்ணமங்கலம் ஊராட்சி, ஆலயங்கரடு முதல் மாத்தூா் எல்லை வரையில் ரூ.35.62 லட்சம் என மொத்தம் ரூ.1.44 கோடியில் தாா் சாலை அமைக்கப்படுகிறது.

இப்பணிகளை அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் தொடங்கிவைத்தாா். அந்தியூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன், ஊராட்சித் தலைவா்கள் சரவணன் (மைக்கேல்பாளையம்), பாவாயி ராமசாமி (கூத்தம்பூண்டி), மயில் கந்தசாமி (எண்ணமங்கலம்), திமுக ஒன்றிய துணைச் செயலாளா் நாகேஸ்வரன், மாவட்ட பிரதிநிதி மாணிக்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.