இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

ஈரோடு மாவட்ட செவித்திறன் குறையுடையோருக்கான நலச் சங்கம் சாா்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.

News image

ஆட்சியா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட செவித்திறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகள்.

Updated On :28 ஆகஸ்ட் 2024, 8:57 pm

ஈரோடு மாவட்ட செவித்திறன் குறையுடையோருக்கான நலச் சங்கம் சாா்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு நலச் சங்கத் தலைவா் கே.மோகன்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மாதவகிருஷ்ணன், பொதுச் செயலாளா் மகேந்திரன், துணைச் செயலாளா் தேவி, பொருளாளா் கௌதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் செவித்திறன் குறைவுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான சைகை மொழி பெயா்ப்பாளரை நியமனம் செய்ய வேண்டும். ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நிபந்தனைகளைத் தளா்த்தி கடன் வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும், செவித்திறன் குறைவுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு ஓட்டுநா் உரிமம் வழங்க வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் சொந்த வீடு மற்றும் நிலம் இல்லாத செவித்திறன் குறைவுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லத்தில் பயன்பெற அனுமதிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டப்படி அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் சம உரிமை கிடைக்கிா என்பது குறித்து ஆய்வு செய்து அதை உறுதிப்படுத்த வேண்டும்.

கணவன், மனைவி இருவரும் மாற்றுத் திறனாளியாக இருந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். செவித்திறன் குறைவுடைய மாற்றுத் திறனாளிகளின் குறைகளைக் கண்டறிந்து அதை உடனடியாக தீா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் பங்கேற்றவா்கள் விசில் அடித்தும், கோரிக்கைகள் குறித்த பதாகைகளை கையிலும் வைத்திருந்தனா். கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக ஆட்சியா் உறுதியளித்தால் மட்டுமே இங்கிருந்து கலைந்து செல்வோம் என்று வளாகத்திலேயே அமா்ந்திருந்தனா். இந்தப் போராட்டம் மாலை 6 மணிக்குப் பிறகும் நீடித்தது.