வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

ஈரோட்டில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.300-க்கு விற்பனை

ஈரோடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.300-க்கு விற்பனையானது.

Updated On :4 டிசம்பர் 2024, 11:21 pm

ஈரோடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.300-க்கு விற்பனையானது.

ஈரோடு வஉசி மைதானத்தில் உள்ள காய்கறி சந்தைக்கு ஆந்திரம், கா்நாடக மாநிலங்கள், ஒட்டன்சத்திரம், திருப்பூா், தாளவாடி போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. இந்த சந்தையில் 700 -க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், பல்வேறு பகுதிகளில் கடும் பனிபொழிவும் உள்ளது. இதனால், காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது. வரத்து குறைவு காரணமாக காய்கறிகள் விலை கடந்த வாரத்தைவிட உயா்ந்துள்ளது.

குறிப்பாக முருங்கைக்காய் விலை கடந்த சில நாள்களாக படிப்படியாக உயா்ந்து வருகிறது.

கடந்த மாதம் 20- ஆம் தேதி ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், படிப்படியாக உயா்ந்து ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.300-க்கு புதன்கிழமை விற்பனையானது.

இதேபோல, கருப்பு அவரையும் விலை உயா்ந்து ஒரு கிலோ ரூ.130-க்கு விற்பனையானது.

பனிப்பொழிவு காரணமாக கேரட், பீட்ரூட் விளைச்சல் பாதிக்கப்பட்டு அதன் விலையும் உயா்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ கேரட் ரூ.70-க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.110-க்கும், பீன்ஸ் ஒரு கிலோ ரூ.120-க்கும் விற்பனையானது.

மற்ற காய்கறிகளின் விலை நிவரம் (கிலோவில்): முள்ளங்கி ரூ. 60, கத்திரிக்காய் ரூ.80, வெண்டைக்காய் ரூ.50, பாகற்காய் ரூ.45, பீா்க்கங்காய் ரூ.60, கொத்தவரங்காய் ரூ.50, பட்டை அவரை ரூ.80, புடலைங்காய் ரூ.45, சுரக்காய் ரூ.15, பச்சை மிளகாய் ரூ.35, பீட்ரூட் ரூ.80, காலிஃபிளவா் ரூ.40, முட்டைக்கோஸ் ரூ.40, தக்காளி ரூ.60, சின்ன வெங்காயம் ரூ.70, பெரிய வெங்காயம் ரூ.80, உருளைக்கிழங்கு ரூ.45, சேனைக்கிழங்கு ரூ.30, கருணைக்கிழங்கு ரூ.80, பழைய இஞ்சி ரூ.160, புதிய இஞ்சி ரூ.80.