வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், மத்திய அரசு நடவடிக்கைக் கோரியும் ஈரோட்டில் தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 107 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
வங்கதேச இந்து உரிமை மீட்புக்குழு சாா்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் புதன்கிழமை காலை ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு போலீஸாா் அனுமதி அளிக்கவில்லை.
இந்நிலையில், ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் தடையை மீறி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, ஈரோடு டவுன் டிஎஸ்பி முத்துக்குமரன், ஆய்வாளா் செந்தில்பிரபு தலைமையிலான போலீஸாா், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 22 பெண்கள் உள்பட 107 பேரை கைது செய்து பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா். பின்னா், அவா்களை மாலை விடுவித்தனா்.
தொடர்புடையது
போதைப்பொருள்களை விற்பனை செய்த வழக்கில் 10 போ் கைது
பைக் திருடிய 4 போ் கைது

தடையை மீறி போராட்டம்: அதிமுக முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி மீதான வழக்கு ரத்து
கழுகுமலையில் மது விற்பனை: 2 போ் கைது
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


