கீழ்பவானி வாய்க்கால் கரை பகுதிகளில் ஒதுங்கிய 3 ஆண் சடலங்களை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோபி அருகேயுள்ள கீழ்பவானி வாய்க்காலில் ஏலத்தூா் செம்மாண்டபதி மற்றும் கூடக்கரை தொட்டிபாளையம், தொட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் அடையாளம் தெரியாத 3 ஆண் சடலங்கள் வியாழக்கிழமை கரை ஒதுங்கின.
இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் நம்பியூா் தீயணைப்பு நிலையம், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடங்களுக்கு வந்த போலீஸாா், தீயணைப்பு வீரா்கள் சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
உயிரிழந்தவா்கள் யாா், கனமழையின்போது அடித்துவரப்பட்டாா்களா என்பன குறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவா் உள்பட 2 போ் உயிரிழப்பு

ஆண் சடலம் மீட்பு

குண்டடம் அருகே பிஏபி வாய்க்காலில் பெண் சடலம் மீட்பு

தொண்டி அருகே உயிரிழந்து கரை ஒதுங்கிய கடல் ஆமை
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

