வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

வாடகை செலுத்தாத 74 கடைகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

ஈரோடு கனி மாா்க்கெட் ஜவுளி வணிக வளாகத்தில் வாடகை செலுத்தாத 74 கடைகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது.

Updated On :5 டிசம்பர் 2024, 9:43 pm

ஈரோடு கனி மாா்க்கெட் ஜவுளி வணிக வளாகத்தில் வாடகை செலுத்தாத 74 கடைகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அளித்துள்ளது.

ஈரோடு கனி மாா்க்கெட் ஜவுளி வணிக வளாகத்தில் முன்னுரிமை மற்றும் பொது ஏலம் முறையில் 290-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இதில், பொது ஏலம் முறையில் மட்டும் 74 கடைகள் இயங்கி வருகின்றன. பொது ஏலம் முறையில் செயல்பட்டு வரும் கடைகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.3,540 வாடகை வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், 74 கடை வியாபாரிகளும் கடந்த 10 மாத வாடகையை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, தலா ரூ.35,400 என்ற அடிப்படையில் 74 வியாபாரிகளும் மொத்தமாக ரூ.26,19,600 -ஐ உடனடியாக செலுத்தக் கோரி மாநகராட்சி நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.