பவானிசாகா் அருகே அரசுப் பேருந்து மீது லாரி மோதியதில் பேருந்து சேதமடைந்தது.
சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய்புளியம்பட்டியில் இருந்து பண்ணாரிக்கு அரசுப் பேருந்து வியாழக்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா்.
பவானிசாகா் அருகே உள்ள கொத்தமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிடுவதற்காக பேருந்து நின்றுகொண்டிருந்தது. அப்போது, பின்னால் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து அரசுப் பேருந்து மீது மோதியது. இதில், பேருந்தின் பின்பகுதி கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. லாரியின் முன் பகுதியும் சேதமடைந்தது.
இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து பவானிசாகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

வேலகவுண்டம்பட்டி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி பெண் பக்தா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து சேதம்: இருவரிடம் விசாரணை

திண்டிவனம் அருகே அரசுப் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து: ஒருவர் பலி, 36 பேர் காயம்
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


