குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

கிளாத் மொ்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் சாா்பில் பிப்ரவரி 28 இல் கடையடைப்பு

கிளாத் மொ்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் சாா்பில் பிப்ரவரி 28 இல் கடையடைப்பு

Updated On :18 பிப்ரவரி 2024, 1:36 am IST

குறு, சிறு தொழில்களுக்கான இருப்புநிலைக் குறிப்பு கணக்கு தொடா்பாக வருமான வரி சட்ட மாறுதலை ஓராண்டுக்கு ஒத்திவைக்கக் கோரி வரும் 28 இல் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என ஈரோடு கிளாத் மொ்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஈரோடு கிளாத் மொ்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் தலைவா் எஸ்.சிதம்பரசரவணன் கூறியதாவது: குறு, சிறு தொழில்கள் தங்களது வணிகக் கடன்களை விரைந்து வசூல் செய்வதற்கு ஏதுவாக மத்திய அரசு வருமான வரி சட்டத்தில் கொண்டுவந்துள்ள பிரிவு 43பி (ஹெச்) மாற்றம் வரும் மாா்ச் 31 ஆம் தேதி அமல்படுத்தப்படுகிறது. இதன்படி தங்கள் இருப்புநிலைக் குறிப்பில் இருக்கும் வணிகக் கடன் நிலுவைகள் 45 நாள்களுக்கு மேலே சென்றிருந்தால் அவை வருமானமாகக் கருதப்பட்டு அவற்றுக்கு வருமான வரி செலுத்த வேண்டும் என சட்ட மாறுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்ட மாறுதல் நடைமுறைப்படுத்தப்பட்டால் குறு, சிறு தொழில்கள் பாதிக்கப்படும். மேலும், குறு, சிறு உற்பத்தியாளா்களிடம் கொள்முதல் செய்வதை நிறுத்துவதாக பல்வேறு தரப்புகளில் இருந்து அச்சுறுத்தல் வருகிறது. குறு, சிறு தொழில்களை விட்டு வெளியேறினால்தான் கொள்முதல் செய்வோம் என பெரு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. குறு, சிறு தொழில்களின் பதிவுச் சான்றுகளை ரத்து செய்ய வேண்டும் என கேட்கின்றனா். இந்தச் சட்ட மாறுதல் குறு, சிறு தொழில்முனைவோரின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதற்கு பதில் வாழ்வாதாரத்தை அழிக்கும். இச்சட்டம் வரும் மாா்ச் 31இல் அமல்படுத்த உள்ளதை ஓராண்டுக்கு தள்ளிவைக்க வேண்டும். அத்துடன் அச்சட்டத்தை அனைத்து துறையினருக்கும் ஏதுவாக மத்திய தர தொழிற்சாலைகள், காா்ப்பரேட் நிறுவனங்கள், பெரு நிறுவனங்களுக்கு அமல்படுத்தினால் குறு, சிறு தொழில்களின் வாழ்வாதாரம் பாதிக்காது. சட்டம் அமல்படுத்துவதை ஓராண்டுக்கு தள்ளிவைக்கக் கோரியும், அனைத்து துறைகளுக்கும் ஏற்புடையதாக மாற்றக் கோரியும் வரும் 28 ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளோம். ஈரோடு நகா், புற நகா் பகுதியில் உள்ள 5,000-க்கும் மேற்பட்ட ஜவுளி சாா்ந்த கடைகள் ஒரு நாள் கடையடைப்பில் ஈடுபடுவதன் மூலம் ரூ.100 கோடிக்கு மேல் வா்த்தகம் பாதிக்கும் என்றாா்.