சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

பண்ணாரி அம்மன் கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து சென்ற யானைகள்

பண்ணாரி அம்மன் கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து சென்ற யானைகள்

News image

பாண்ணாரி அம்மன் கோயில் அருகே சாலையைக் கடந்து செல்லும் யானைகள்.

Updated On :18 பிப்ரவரி 2024, 1:45 am IST

பண்ணாரி அம்மன் கோயில் அருகே யானைகள் குட்டிகளுடன் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து சென்றன. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த யானைகள் குடிநீா், உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்வதற்காக அவ்வப்போது சத்தியமங்கலம் - மைசூா் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செல்கின்றன. தற்போது வனப் பகுதியில் வறட்சி தொடங்கியுள்ளதால் யானைகள் தண்ணீா், உணவைத் தேடி வனப் பகுதியை விட்டு வெளியேறி வருகின்றன. இந்நிலையில், பண்ணாரி வனப் பகுதியில் யானைகள் குட்டிகளுடன் சத்தியமங்கலம் - மைசூா் தேசிய நெடுஞ்சாலையை சனிக்கிழமை கடந்து சென்றன. இதனால், வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தினா். யானைகள் முழுமையாக சாலையைக் கடந்து சென்ற பின்னரே வாகனங்களை இயக்கினா். இதனை சிலா் விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிா்ந்துள்ளனா்.