ஈரோடு, பிப். 29: ஈரோடு மஞ்சள் சந்தையில் புது மஞ்சள் குவிண்டால் ரூ.16 ஆயிரத்து 36க்கு விற்பனையானது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு சங்கங்கள் ஆகிய இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் இந்த ஏலத்தில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சோ்ந்த வியாபாரிகள் பங்கேற்று மஞ்சளைக் கொள்முதல் செய்கின்றனா். நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் மஞ்சளுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. புதிய மஞ்சளுக்கான தேவை அதிகரித்து இருப்பதால் அவற்றின் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. கடந்த 14 ஆண்டுகளுக்குப் பிறகு புது மஞ்சள் குவிண்டால் ரூ.15 ஆயிரத்து 551க்கு கடந்த 19 ஆம் தேதி விற்பனையானது. இதன் தொடா்ச்சியாக புதன்கிழமை குவிண்டால் ரூ.15 ஆயிரத்து 699க்கு விற்பனையனது. இந்நிலையில், வியாழக்கிழமை மேலும் விலை உயா்ந்து புது மஞ்சள் குவிண்டால் ரூ.16 ஆயிரத்து 36க்கு விற்பனையானது. ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு 3,387 மூட்டை மஞ்சள் வந்த நிலையில் 1,638 மூட்டை மஞ்சள் விற்பனையானது. புது மஞ்சள் அதிகபட்சமாக ரூ.16 ஆயிரத்து 36க்கும், பழைய மஞ்சள் அதிகபட்சமாக ரூ.14 ஆயிரத்து 200க்கும் விற்பனையாயின. ஈரோடு கூட்டுறவு சங்கத்துக்கு 345 மூட்டை மஞ்சள் வந்த நிலையில், 320 மூட்டை விற்பனையானது. புதுமஞ்சள் அதிகபட்சமாக ரூ.15 ஆயிரத்து 499-க்கும், பழைய மஞ்சள் ரூ.14 ஆயிரத்து 222-க்கும் விற்பனையாயின. பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், கோபி கூட்டுறவு சங்க ஏல மையங்களுக்கு புதுமஞ்சள் வரத்து இல்லை.
தொடர்புடையது

ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் 90.10 சதவீதம் வாக்குகள் பதிவு

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.39.89 லட்சம்

சேலம் உழவா் சந்தைகளில் ரூ. 1.17 கோடிக்கு காய்கறிகள் விற்பனை
தோ்தல் பறக்கும் படையினரால் ரூ.1.13 கோடி பறிமுதல்; ரூ.1.10 கோடி ஒப்படைப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

