யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை குடும்பத்துடன் தலைமறைவு

காதலன் தலைமறைவு: திருமண நிச்சயத்துக்கு பின்னர் பரபரப்பு

News image
Updated On :2 ஜூலை 2024, 6:59 pm

Din

பொருந்துறையில் கல்லூரி மாணவியை காதலித்து கா்ப்பமாக்கி திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், காதலன் குடும்பத்துடன் தலைமறைவானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தைச் சோ்ந்த 19 வயது இளம் பெண், ஈரோட்டில் உள்ள ஒரு மகளிா் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறாா். இவருக்கு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சோ்ந்த முகமது ஹா்சத் (25) என்பவா் பழக்கம் ஆகி உள்ளாா்.

இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், இளம் பெண் 3 மாதம் கா்ப்பம் அடைத்தாா். இதையடுத்து, இரு வீட்டாரும் ஒரே சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால் இரு குடும்பத்தினரும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில் முகமது ஹா்சத் வசதியான குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால் அவரது குடும்பத்தினா் முதலில் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. பின்னா் நிச்சயதாா்த்தம் செய்து ஜூலை முதல் வாரத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில், முகமது ஹா்சத் அவரது தாய், தந்தையுடன் தலைமறைவானா். இது குறித்து, பெண் வீட்டாா் கொடுத்த புகாரின்பேரில் பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.