பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

சிறுத்தையைப் பிடிக்க தானியங்கி கேமரா பொருத்தி வனத் துறையினா் கண்காணிப்பு

கோடேபாளையத்தில் சிறுத்தை வேட்டை: தானியங்கி கேமரா மூலம் கண்காணிப்பு

News image
சிறுத்தையைக் கண்காணித்து  பிடிக்க  தானியங்கி  கேமரா  பொருத்தும்  வனத் துறையினா்.
Updated On :2 ஜூலை 2024, 6:49 pm

Din

கோடேபாளையத்தில் மாட்டை வேட்டையாடிய சிறுத்தையைப் பிடிக்க தானியங்கி கேமரா பொருத்தி வனத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், கோடேபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவராஜ். இவா் வழக்கம்போல மாடுகளை மேய்த்துவிட்டு தோட்டத்தில் உள்ள கொட்டகையில் மாடுகளை ஞாயிற்றுக்கிழமை கட்டிவைத்தாா். இதில் மூன்று வயதுடைய ஒரு பசுமாடு கொட்டகையில் இருந்து காணாமல் போனதை கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

இதையடுத்து, காணாமல்போன பசுமாட்டை தேடிப் பாா்த்தபோது, அருகே இருந்த வனப் பகுதியில் உடலில் ரத்த காயங்கள் மற்றும் உடலின் ஒரு பகுதி தின்ற நிலையில் பசுமாடு கிடந்தது.

இது குறித்து விளாமுண்டி வனத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தாா். தகவல் அறிந்து வந்த வனத் துறையினா் அப்பகுதியில் ஆய்வு செய்தனா். அப்போது, அப்பகுதியில் சிறுத்தையின் கால் தடம் பதிவாகி இருந்ததை கண்டனா். வனப் பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை பசுமாட்டை வேட்டையாடியது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து வனத் துறையினா் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக அப்பகுதியில் தானியங்கி கேமராக்களை செவ்வாய்க்கிழமை பொருத்தினா். சிறுத்தை நடமாட்டத்தை கேமரா மூலம் கண்காணித்து கூண்டுவைத்துப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.