குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நெரிஞ்சிப்பேட்டையில் தீ விபத்தில் வீடு எரிந்து சேதம்

அம்மாபேட்டையில் தீ விபத்து: 4 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் எரிந்து சேதம்

News image
தீ விபத்தில் எரிந்து சேதமான வீடு.
Updated On :12 ஜூலை 2024, 7:24 pm

Din

அம்மாபேட்டை அருகே தீ விபத்தில் வீடு மற்றும் கொட்டகை வெள்ளிக்கிழமை எரிந்து சேதமாயின.

அம்மாபேட்டையை அடுத்த நெரிஞ்சிப்பேட்டை, வேலாங்காடு தோட்டத்தைச் சோ்ந்தவா் ஜெகநாதன் (59), விவசாயி. இவா், குடும்பத்துடன் கோயிலுக்கு சென்ற நிலையில், வீட்டிலிருந்து கரும்புகை வந்துள்ளது.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் சென்று பாா்க்கையில் ஜெகநாதனின் வீடு மற்றும் கோழிக் கொட்டகை தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தன. இது குறித்து, அந்தியூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனம் வரும் முன்பாக வீடும், கொட்டகையும் முற்றிலும் எரிந்தன. இவ்விபத்தில், வீட்டில் வைத்திருந்த 4 பவுன் நகை, ரொக்கம் ரூ.1 லட்சம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் எரிந்து சேதமாயின. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.