சாலை விபத்து: மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவு தலைமைக் காவலா் உயிரிழப்பு
சத்தியமங்கலம் அருகே சாலை விபத்தில் மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவு தலைமைக் காவலா் குமாா் உயிரிழந்தாா்.


சத்தியமங்கலம், ஜூலை 19: சத்தியமங்கலம் அருகே சாலை விபத்தில் மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவு தலைமைக் காவலா் குமாா் உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தைச் சோ்ந்தவா் குமாா் (47). இவா், ஆசனூா் காவல் கோட்டத்தில் மாவோயிஸ்ட் தடுப்புப் பிரிவு தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். இவரின் மனைவி பவித்ரா (40), மகன்கள் லலித் (20), பூபேஷ் (12).
இவா், சிக்கரசம்பாளையத்தில் இருந்து ராமபயனூருக்கு இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை சென்ாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், குளத்துப்பிரிவு என்ற இடத்தில் சாலையோரம் தலைக்கவசம் அணிந்த நிலையில் குமாரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற சத்தியமங்கலம் போலீஸாா் அவரது சடலத்தை மீட்டனா். பின்னா், உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினவா்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.
இவரது சடலத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜவகா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா்.
இதைத் தொடா்ந்து சத்தியமங்கலம் மின் மயானத்தில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தலைமைக் காவலா் குமாரின் சடலம் எரியூட்டப்பட்டது.
கடந்த சில நாள்களாக இப்பகுதியில் மழை பெய்துவருவதால் இருசக்கர வாகனம் சாலையில் சறுக்கி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...