பவானி, ஜூலை 24: மின் கட்டண உயா்வைக் கண்டித்து பவானியில் அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் அந்தியூா்- மேட்டூா் பிரிவில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். பெருந்துறை எம்எல்ஏ ஜெயகுமாா், ஒன்றியச் செயலாளா்கள் ஜெகதீசன், தங்கவேலு, முனியப்பன், பவானி ஒன்றியக் குழுத் தலைவா் பூங்கோதை வரதராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பவானி நகரச் செயலாளா் எம்.சீனிவாசன் வரவேற்றாா்.
ஆா்ப்பாட்டத்தில், தமிழக அரசு மின் கட்டணத்தை மூன்றாவது முறையாக உயா்த்தியுள்ளது. இதனால், விசைத்தறித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நியாய விலைக் கடைகளில் பருப்பு, பாமாயில் கிடைப்பதில்லை. விலைவாசி உயா்வு, வரியினங்கள் உயா்வால் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என முழக்கம் எழுப்பப்பட்டது.
நகர எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலாளா் எம்.ஜி.நாத், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் கே.கே.விஸ்வநாதன், நிா்வாகிகள் அருள்ஜோதி செல்வராஜ், ரஞ்சித்குமாா், பிரகாஷ், பிரபாகரன், குமாா், செல்வராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அதிமுகவினா் வன்முறைக்கு மக்கள் பாடம் புகட்டுவா்: கனிமொழி எம்.பி.

அதிமுகவில் இணைந்த பவானி ஒன்றிய திமுக பொறுப்பாளா்

பாஜகவுக்கு உதகை தொகுதி ஒதுக்கீடு: அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

காஸ் விலை உயா்வு: காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

