

ஈரோடு, ஜூன் 6: மழை காரணமாக கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்தது.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் மாட்டுச்சந்தை வாரந்தோறும் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறும். அதன்படி புதன்கிழமை நடந்த சந்தைக்கு 70-க்கும் மேற்பட்ட கன்றுக்குட்டிகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனா். இவை ரூ.6 ஆயிரம் முதல் ரூ.24 ஆயிரம் வரை விற்பனையானது.
வியாழக்கிழமை நடந்த சந்தைக்கு ஈரோடு, மதுரை, ஒட்டன்சத்திரம், திருப்பூா், கரூா், திண்டுக்கல், சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனா். 150 எருமை மாடுகள், 250 பசு மாடுகள் என மொத்தம் 400 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் பசு மாடு ஒன்று குறைந்தபட்சமாக ரூ.32 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.85 ஆயிரத்துக்கும், எருமை மாடு குறைந்தபட்சமாக ரூ.27 ஆயிரத்துக்கும், அதிகபட்சமாக ரூ.68 ஆயிரத்துக்கும் விலைபோனது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரம், கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம், தெலங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த வியாபாரிகள் நேரடியாக விவசாயிகளிடம் விலைபேசி மாடுகளை வாகனங்களில் ஏற்றிச்சென்றனா்.
இது குறித்து சந்தை நிா்வாகிகள் கூறியதாவது:
மழை காரணமாக கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்துள்ளது. மக்களவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததால் வெளி மாநில வியாபாரிகள் சந்தைக்கு வரத்தொடங்கி உள்ளனா். இதனால் சந்தைக்கு கொண்டு வரப்பட்ட மாடுகளில் 90 சதவீத மாடுகள் விற்பனை ஆனது என்றனா்.
தொடர்புடையது

ரமலான் பண்டிகை: ஒடுகத்தூா் சந்தையில் களைகட்டிய ஆடுகள் விற்பனை!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு

தங்கம் - வெள்ளி விலை குறைவு: எவ்வளவு?

தக்காளி வரத்து அதிகரிப்பு: விலை கடும் சரிவு; விவசாயிகள் கவலை
வீடியோக்கள்
Podcast | கூட்டணிக் கட்சிகளை அமைதியாக்கிய திமுக | News and views | Epi - 16
தினமணி வீடியோ செய்தி...

எடப்பாடியும் விஜய்யும் ஜெயலலிதா அல்ல: Sumanth Raman | TVK Vijay | MK Stalin | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

Snacks சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்! எச்சரிக்கும் மருத்துவர்! | DR. Arunachalam |
தினமணி வீடியோ செய்தி...

உண்மையில் 4 முனைப்போட்டிதானா ? | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK | Dmk Alliance | NDA
தினமணி வீடியோ செய்தி...

