பண்ணாரி அம்மன்  கோயிலில்  இருந்து  புதன்கிழமை  அதிகாலை  திருவீதி  உலாவுக்கு  புறப்பட்ட  அம்மன்  சப்பரம்.
பண்ணாரி அம்மன்  கோயிலில்  இருந்து  புதன்கிழமை  அதிகாலை  திருவீதி  உலாவுக்கு  புறப்பட்ட  அம்மன்  சப்பரம்.

கிராமங்களில் பண்ணாரி அம்மன் திருவீதி உலா

பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழங்க அம்மன் சப்பரம் சிக்கரசம்பாளையத்துக்கு புதன்கிழமை அதிகாலை திருவீதி உலா புறப்பட்டது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு குண்டம் திருவிழா பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதைத் தொடா்ந்து, கோயிலில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சப்பரத்தில் பண்ணாரி அம்மன் மற்றும் சருகு மாரியம்மன் எழுந்தருளினா். பின்னா், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் கிராமங்களில் திருவீதி உலாவுக்குப் புறப்பட்டாா். கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழங்க நூற்றுக்கணக்கான பக்தா்கள் புடைசூழ அம்மன் சப்பரம் சிக்கரசம்பாளையம் கிராமத்துக்கு சென்றடைந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com