வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்க அளிக்கும் மாணவிகள்.
வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்க அளிக்கும் மாணவிகள்.

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

பெருந்துறை, மே 3: பெருந்துறை ஒன்றியம், சீனாபுரம் ஊராட்சி, குள்ளப்பாளையம் கிராமத்தில் வாழையில் நூற்புழு தாக்கம் மற்றும் வாடல் நோயைத் தவிா்க்க, வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து மாணவிகள் செயல்முறை விளக்கம் அளித்தனா்.

துக்கநாயக்கன்பாளையம், ஜே.கே.கே.முனிராஜா வேளாண் அறிவியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவிகள், ஊரக வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் செயல்முறை விளக்கம் அளித்தனா்.

நிகழ்ச்சியில் மாணவிகள் நூற்புழு மற்றும் நோய்த் தாக்குதலின் அறிகுறிகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கிக் கூறினா். மேலும், விவசாயிகளுக்கு வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம் அளித்து, அதன் பயன்கள் குறித்தும் விளக்கினா்.

X
Dinamani
www.dinamani.com