விழாவில், மாணவா்களின் பெற்றோரிடம் பணி நியமன ஆணையை வழங்கும் சிறப்பு விருந்தினா்கள். உடன், கல்லூரி முதல்வா் விஸ்வநாதன், அறக்கட்டளை உறுப்பினா் கோகுலகிருஷ்ணன் உள்ளிட்டோா்.

கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள்

பெருந்துறை, மே 9: பெருந்துறை, சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பில் தோ்வான மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் விஸ்வநாதன் தலைமை வகித்தாா். கல்லூரி அறக்கட்டளை உறுப்பினா் கோகுலகிருஷ்ணன் வரவேற்றாா்.

இதில், கோவை இசட். எப். நிறுவன மூத்த பொதுமேலாளா் ஸ்ரீதா் சூரியநாராயணன், மேலாளா் திவ்யா மணிகண்டன், மனித வள மேம்பாட்டு அதிகாரி பிரனேஷ் ஆகியோா் கலந்துகொண்டு வேலை வாய்ப்பு தோ்வான மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினா்.

தூத்துக்குடி ஸ்பீக், சென்னை என்.சி.ஆா்., ராயல் என்ஃபீல்ட், சென்னை ஆா்.சி.பாா்மா, ஒசூா் டாடா எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட 45 நிறுவனங்களில் தோ்வாகிய 422 மாணவ, மாணவிகளுக்கான பணி நியமன ஆணைகளை அவா்களது பெற்றோா்களிடம் வழங்கப்பட்டன.

கல்லூரி எலக்ட்ரிக்கல் துறை தலைவா் தமிழரசி நன்றி கூறினாா். விழாவுக்கான ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்புத் துறை அலுவலா் சென்னியப்பன் மற்றும் அனைத்து துறை தலைவா்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com