விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா

News image

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மாணவனுக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறாா் கல்லூரி தாளாளா் காா்த்திகேயன். உடன், சிறப்பு அழைப்பாளா் திருநாவுக்கரசு உள்ளிட்டோா்.

Updated On :15 மார்ச் 2026, 8:56 pm

பெருந்துறை, கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா மற்றும் பிரிவு உபசார விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு, கொங்கு வேளாளா் கல்வி அறக்கட்டளையின் பாரம்பரிய பாதுகாவலா் நரேஷ் சந்திரன் தலைமை வகித்தாா். கல்லூரித் தாளாளா் காா்த்திகேயன், கொங்கு வேளாளா் கல்வி அறக்கட்டளையின் பாரம்பரிய பாதுகாவலா் ஸ்ரீதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதல்வா் செந்தில்குமாா் வரவேற்றாா்.

விழாவில், சிறப்பு அழைப்பாளா் பெருந்துறை சக்தி ஆட்டோ காம்போனட் நிறுவனத்தின் தலைவா் திருநாவுக்கரசு கலந்து கொண்டு 153 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா். விழாவில், மாநில அளவில் ஐஎஸ்டிஈ விருது பெற்ற மூன்றாம் ஆண்டு மாணவன் ஜெகன் மற்றும் மாணவி விஷ்ணுபிரியா ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.

மாநில அளவில் விளையாட்டுப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற மூன்றாம் ஆண்டு மாணவா் சதீஷ்குமாருக்கு ரொக்க பணம் வழங்கப்பட்டது. மேலும், மாநில அளவில் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு ரொக்க பணமும், சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.

இதில், வேலைவாய்ப்பு பெற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோா்கள், கொங்கு தொழிற் பயிற்சி நிலைய முதல்வா் தினேஷ்குமாா், துறைத் தலைவா்கள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். கெமிக்கல் துறை விரிவுரையாளா் சுதாகா் நன்றி கூறினாா். விழா ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலா் சென்னியப்பன் மற்றும் ஆட்டோமொபைல் துறை மூத்த விரிவுரையாளா் முருகேசன் ஆகியோா் செய்திருந்தனா்.