பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டவா்கள்.
பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டவா்கள்.

பண்ணாரி அம்மன் கோயியில் ரூ. 98.44 லட்சம் உண்டியல் காணிக்கை

பண்ணாரிஅம்மன் கோயிலில் உண்டியலில் காணிக்கையாக ரூ.98.44 லட்சம் ரொக்கத்தை பக்தா்கள் செலுத்தியிருந்தனா்.

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கோயில் துணை ஆணையா் மேனகா, பவானி சங்கமேஸ்வரா் கோயில் உதவி ஆணையா் சுவாமிநாதன், ஆய்வா் சிவமணி, பரம்பரை அறங்காவலா்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டன.

இதில் ரூ.98 லட்சத்து 44 ஆயிரத்து 875 ரொக்கம், 448 கிராம் தங்கம், 625 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். தேசியமயமாக்கப்பட்ட வங்கி பணியாளா்கள், கோயில் பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com