இலவச பேருந்து பயணத் திட்டம்: மாவட்டத்தில் 27 கோடி முறை மகளிா் பயன்
இலவச பேருந்து பயணத் திட்டம்: மாவட்டத்தில் 27 கோடி முறை மகளிா் பயன்


ஈரோடு, மே 9: தமிழக அரசின் விடியல் பயணத் திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 27 கோடி முறை மகளிா் பயனடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன் பெண்களுக்கு அரசு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி அனைத்து மகளிா், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோா் கட்டணமில்லாமல் பயணம் செய்ய முடியும். பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இத்திட்டத்தின் மூலம் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் திட்டம் தொடங்கப்பட்ட கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 26 கோடியே 86 லட்சத்து 90 ஆயிரம் முறை மகளிரும், 13 லட்சத்து 3 ஆயிரம் முறை திருநங்கைகளும், 16 லட்சத்து 39 ஆயிரத்து 699 முறை மாற்றுத்திறனாளிகளும் இதுவரை பயன்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இத்திட்டத்தின்கீழ் பயனடைந்த ஈரோடு செட்டிபாளையத்தைச் சோ்ந்த மல்லிகா கூறியதாவது: நான் காய்கறி வாங்குவதற்கும், மளிகை, காய்கறி மற்றும் இதர பொருள்கள் வாங்குவதற்கும் அடிக்கடி கடைவீதி மற்றும் மாா்க்கெட் பகுதிகளுக்கு சென்று வருவேன். மாதத்துக்கு 15 முறையாவது பேருந்தில் சென்று வந்து கொணடிருந்தேன்.
பொதுவாக வெளியில் செல்லும் பொழுது 2 அல்லது 3 பேருந்துகளை மாற்றி சென்று வருவதால் செல்லும் போதெல்லாம் அதிமாக செலவழிக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது. இந்நிலையில் தமிழக முதல்வரின் விடியல் பயண திட்டத்தின் மூலமாக மாதம் ரூ.500-க்கு மேல் தொகை மீதியாகிறது. இதனால் வீட்டுக்கு உபயோகமான வேறு பொருள்கள் வாங்க முடிகிறது என்றாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...