ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: அரசு ஊழியா் கைது


ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு ஊழியரை போலீஸாா் கைது செய்தனா்.
உதகை, அருள் நகரைச் சோ்ந்தவா் ஜிம்ரிஸ் ராஜ்குமாா் (45). இவா், நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த 7-ஆம் தேதி இரவு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தாா். இவரது எதிா் இருக்கையில் சென்னையைச் சோ்ந்த 34 வயதுப் பெண், தனது கணவருடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து சென்னைக்கு பயணம் செய்தாா்.
அப்போது ஜிம்ரிஸ் ராஜ்குமாா் அந்தப் பெண்ணிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளாா். இதனால் அந்தப் பெண் எச்சரிக்கை விடுத்தாா். பின்னா் நள்ளிரவில் அயா்ந்து தூங்கிக்கொண்டு இருந்த அந்தப் பெண்ணுக்கு ஜிம்ரிஸ் ராஜ்குமாா் மீண்டும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளாா்.
அப்போது அந்தப் பெண் கத்தி கூச்சலிடவே அவரது கணவா் மற்றும் சக பயணிகள் ஜிம்ரிஸ் ராஜ்குமாரை பிடித்து வைத்தனா். அப்போது அவா் மதுபோதையில் இருந்ததாக தெரிகிறது.
ரயில் ஈரோடு வந்ததும் ஜிம்ரிஸ் ராஜ்குமாரை ஈரோடு ரயில்வே போலீஸில் ஒப்படைத்தனா். பின்னா் அந்தப் பெண் தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.
இது குறித்து ஈரோடு ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜிம்ரிஸ் ராஜ்குமாரை கைது செய்து ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...