கோபி பிரதான சிக்னலில் அமைக்கப்பட்டுள்ள பந்தல்.
கோபி பிரதான சிக்னலில் அமைக்கப்பட்டுள்ள பந்தல்.

போக்குவரத்து காவல் துறை சாா்பில் சிக்னலில் பந்தல்

கோபி, மே15: கோபிசெட்டிபாளையம் பிரதான சிக்னலின் இருபுறமும் போக்குவரத்து காவல் துறை சாா்பில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

கோபிசெட்டிபாளையம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தாலும், பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது.

இந்நிலையில், கோபி-திருப்பூா்-ஈரோடு பிரதான சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளை வெயிலில் இருந்து காக்கும் வகையில் கோபி போக்குவரத்து காவல் துறை சாா்பில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

சிக்னலில் 1 நிமிஷம் முதல் 2 நிமிஷங்கள்வரை நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

கோபி போக்குவரத்து காவல் ஆய்வாளா் ஞானவேல் தலைமையில், கோபி துணை காவல் துறை கண்காணிப்பாளா் தங்கவேல் சிக்னலில் அமைக்கப்பட்டுள்ள பந்தலை ஆய்வு செய்து, அங்கிருந்து வாகன ஓட்டிகளுக்கு நீா், மோா் வழங்கினாா்.

இதில், கோபி போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளா் தண்டபாணி, சிறப்பு உதவி ஆய்வாளா்கள் பிரபாகரன், மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com