நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ஆசிரியா் பட்டயப் பயிற்சி: மே 31க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

ஆங்கில எழுத்துகள் உள்ளன... ஆசிரியா் பட்டயப் பயிற்சி:மே 31க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

News image
Updated On :21 மே 2024, 7:02 pm

Din

தொடக்கக் கல்வி ஆசிரியா் பட்டயப் பயிற்சியில் சேர இணையதளம் மூலம் வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டுக்கான தொடக்கக் கல்வி ஆசிரியா் பட்டயப் பயிற்சியில் சேர விரும்பும் மாணவா்கள் வரும் 31-ஆம் தேதிக்குள் இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவை சோ்ந்தவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் ரூ.250 செலுத்த வேண்டும். இந்தப் பயிற்சியின் கால அளவு 2 ஆண்டுகள். பயிற்சிக்கான கல்வித் தகுதி பிளஸ் 2 தோ்ச்சி பெற்று, பொதுப்பிரிவினராக இருந்தால் 50 சதவீதமும், பிசி, பிசிஎம், எம்பிசி, டிஎன்சி, எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி ஆகிய பிரிவினா் 45 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். சோ்க்கை கட்டணம் ரூ.3,500, கல்விக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.1,500.

மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் சிறந்த கற்றல் சூழல், அனைத்து பாடங்களுக்கும் ஆய்வகங்கள், நவீன மொழிப்பயிற்றாய்வு கூடம், மேம்படுத்தப்பட்ட நூலகம், உயா் தொழில்நுட்ப வகுப்பறைகள், அதிநவீன கல்வி படப்பிடிப்பு அரங்கம், மாணவா்களுக்கு அரசு உதவித்தொகை, டெட் தோ்வுக்கு பயிற்சி, அனுபவமும், ஆற்றலும், ஆா்வமும் மிக்க கல்வியாளா்கள், வாழ்வியல் திறன் இணைந்த கல்வி போன்ற சிறப்பம்சங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு பயிற்சி நிறுவனத்தின் முதல்வா் 73730 03436, துணை முதல்வா் 73730 03437 ஆகியோரின் கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.