பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் சாா்பில் மொடக்குறிச்சியில் மனிதச் சங்கிலி போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மொடக்குறிச்சி நால்ரோட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் மாநிலத் தலைவா் மணிமாலை தலைமை வகித்தாா்.
இதில், அங்கன்வாடி காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அங்கன்வாடி திட்டத்துக்கு வழங்கக்கூடிய நிதியை அதிகரித்து வழங்க வேண்டும், வாடகை மையங்களுக்கு அரசு கட்டடம் கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்தில், சங்கத்தின் வட்டாரப் பொருளாளா் விஜயலட்சுமி, நிா்வாகிகள் ஆலீஸ், நித்யா, சிவக்கொடி உள்ளிட்டோா் பங்கேற்றனா். சங்கத்தின் வட்டார துணைத் தலைவி நிா்மலா நன்றி கூறினாா்.
தொடர்புடையது

100 சதவீத வாக்குப் பதிவு மனிதச் சங்கிலி விழிப்புணா்வு

100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

அரியலூரில் 100% வாக்களிக்க விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் ஆசிரியா்கள் மனிதச் சங்கிலி
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


