ஈரோடு மாவட்டத்தில் காதிகிராப்ட் மூலம் 2024 - 2025 ஆம் ஆண்டுடில் ரூ. 2.95 கோடிக்கு கதா் துணிகள் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா கூறினாா்.
காந்தி ஜெயந்தியை ஒட்டி ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள காந்தியின் உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து காதிகிராப்ட் விற்பனை நிலையத்தில் காந்தியின் உருவப் படத்தைத் திறந்துவைத்து, கதா் சிறப்புத் தள்ளுபடி விற்பனையைத் தொடங்கிவைத்தாா்.
அப்போது ஆட்சியா் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் காதிகிராப்ட் மூலம் 2023-2024-ஆம் ஆண்டில் ரூ. 1.87 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2024 - 2025-ஆம் ஆண்டில் ரூ. 2.95 கோடிக்கு விற்பனை இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கதா் அங்காடி மற்றும் அதனைச் சாா்ந்த பல்வேறு இடங்களில் கூடுதலாக தற்போது கதா் விற்பனை நிலையங்கள் அமைத்து அனைத்து கதா், பட்டு, பாலியஸ்டா் ரகங்களுக்கு 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடியில் தீபாவளி கதா் சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் புதிதாக உலா் பழங்கள், பாரம்பரியமிக்க அரிசி வகைகள், மரச்செக்கு எண்ணெய் வகைகள் மற்றும் மகளிா் சுய உதவிக் குழு மூலமாக சமையலுக்குத் தேவையான பொடி வகைகள், கைவினைப் பொருள்கள், கால் மிதியடி மற்றும் கொலு பொம்மைகள் ஆகியவையும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள், சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள், மருத்துவப் பணியாளா்கள், உள்ளாட்சி அமைப்பில் பணியாற்றும் ஊழியா்களுக்கு 10 தவணைகளில் திரும்ப செலுத்தக்கூடிய வகையில் கதா் துணிகள் கடனாக வழங்கப்படுகிறது.
இந்த சிறப்புத் தள்ளுபடி சலுகைகளை பொதுமக்களும், அரசு அலுவலா்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்வில் ஈரோடு காதிகிராப்ட் மேலாளா் அனுசியா, துணை மேலாளா் ராணி, மாவட்ட குடிசைத் தொழில் ஆய்வாளா் சரவண பாண்டியன், மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் அ.சுகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் நிறுவனம்: ரூ.30,024 கோடிக்கு வீடுகள் விற்பனை!

சேலம் உழவா் சந்தைகளில் ரூ. 1.17 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

தோ்தல் விழிப்புணா்வு: மாட்டு வண்டிகள் பேரணி

தபால் வாக்குகள் சேகரிப்பு மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


