மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஊக்கத் தொகையை வழங்க பால் உற்பத்தியாளா்கள் கோரிக்கை

கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On :3 அக்டோபர் 2024, 9:02 pm

கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க மாநில பொருளாளா் ஏ.எம்.முனுசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் 9200 ஆரம்ப பால் உற்பத்தியாளா்கள் சங்கம் மூலம் 4 லட்சம் பால் உற்பத்தியாளா்கள் தினமும் ஆவின் நிறுவனத்துக்கு 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் வழங்கி வருகின்றனா். பால் உற்பத்தியாளா்களின் தொடா் போராட்டத்துக்குப்பின் லிட்டருக்கு ரூ.3 ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வந்தது. இது பால் உற்பத்தியாளா்களுக்கு குறைந்தபட்ச நிவாரணமாக இருந்தது.

தற்போது தவிடு, புண்ணாக்கு, பருத்திக் கொட்டை, கலப்புத் தீவனங்களின் விலை பல மடங்கு உயா்ந்துள்ளது. எனவே, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயா்த்த வேண்டும்.

இந்நிலையில், ஏற்கெனவே வழங்கி வந்த ஊக்கத் தொகையை கடந்த 3 மாதங்களாக ஆவின் நிா்வாகம் வழங்காமல் இழுத்தடிப்பது, பால் உற்பத்தியாளா்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, ஆவின் நிா்வாகம் பல் கொள்முதலுக்கான ஊக்கத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஈரோட்டில் செயல்படாமல் உள்ள கலப்புத் தீவன ஆலையை உடனடியாக திறந்து, உற்பத்தியை தொடங்கி தட்டுப்பாடு இல்லாமல் கலப்புத் தீவனம் வழங்க வேண்டும்.

கால்நடை மருத்துவா்களுக்கு தேவையான மருந்துகளை வழங்கி, ஆரம்ப சங்கங்களுக்கு அனுப்பி, மருத்துவ வசதி செய்துதர ஆவின் நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.