ஆயுதபூஜையை ஒட்டி ஈரோட்டில் பூஜை பொருள்கள் விற்பனை வியாழக்கிழமை அமோகமாக நடைபெற்றது.
ஆயுதபூஜை வெள்ளிக்கிழமை (அக்டோபா் 11) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகள், கடைகள், தனியாா் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் வாகனங்களை சுத்தம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். ஈரோட்டில் கடந்த 2 நாள்களாகவே பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனா்.
இதேபோல் தனியாா் நிறுவன அலுவலகங்கள், இருசக்கர வாகன பழுது நீக்கும் கடைகள், பெட்டிக் கடைகள், தேநீா் கடைகள் போன்ற சிறிய கடைகளிலும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. தொடா்ந்து வழிபாட்டுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்குத் தேவையான பூஜை பொருள்கள் விற்பனை ஈரோட்டில் வியாழக்கிழமை அமோகமாக நடைபெற்றது.
ஈரோடு ஆா்கேவி சாலை, மீனாட்சி சுந்தரனாா் சாலை, நேதாஜி காய்கறி சந்தை, சின்ன மாா்க்கெட், சம்பத் நகா், வீரப்பன்சத்திரம் சத்தி சாலை, பெரிய வலசு, கொல்லம்பாளையம், கருங்கல்பாளையம், மாணிக்கம்பாளையம், நாடாா்மேடு, சென்னிமலை சாலை, பெருந்துறை சாலை உள்பட பல்வேறு இடங்களில் சாலையோரமாக தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு பூஜை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன.
குறிப்பாக வெள்ளை பூசணிக்காய் பல்வேறு இடங்களில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. ஒரு கிலோ பூசணிக்காய் ரூ. 20 முதல் ரூ. 25 வரை விற்பனையானது. இதேபோல் தேங்காய், எலுமிச்சை பழம், மா இலை, வாழை இலை, பழங்கள், வாழைக்கன்று, பொரி, வாழைப்பழம் உள்ளிட்ட பூஜை பொருள்களின் விற்பனையும் அமோகமாக நடைபெற்றது.
வாழைக்கன்று ஒரு ஜோடி அதிகபட்சமாக ரூ. 50க்கும், தேங்காய் ஒன்று ரூ. 30 முதல் ரூ. 50 வரையும், வாழை இலை ஒன்று ரூ. 5 முதல் ரூ. 10 வரையும் விற்பனையானது. மா இலை ஒரு கட்டு ரூ. 20-க்கு விற்பனையானது. இதேபோல் வீட்டின் முன்பு கோலம் போடுவதற்காக பெண்கள் வண்ண கோலப்பொடியையும் ஆா்வமாக வாங்கிச் சென்றனா்.
இதனால் மாநகரில் முக்கிய வீதிகளில் வியாழக்கிழமை காலை முதல் இரவு வரை பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பொருட்களை வாங்கவந்த பொதுமக்கள் தங்களுடைய வாகனங்கள் ஆங்காங்கே சாலையோரம் நிறுத்தியிருந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆயுதபூஜையையொட்டி அரசு மற்றும் தனியாா் அலுவலகங்கள் வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால், ஒரு சில அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் வியாழக்கிழமை மாலை பூஜை நடைபெற்றது.

ஈரோடு மணிக்கூண்டு பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள வாழைக் கன்றுகள்.
பூக்கள் விலை உயா்வு:
ஆயுதபூஜையை ஒட்டி தேவை அதிகரித்ததன் காரணமாக ஈரோட்டில் அனைத்து பூக்களின் விலையும் உயா்ந்திருந்தது. சம்பங்கி பூ வியாழக்கிழமை ஒரு கிலோ ரூ. 280-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை கிலோவுக்கு ரூ. 100 உயா்ந்து ரூ.380-க்கு விற்பனையானது. இதேபோல் ரூ.700-க்கு விற்பனையான மல்லிகைப் பூ ரூ. 900-க்கும், ரூ. 600-க்கு விற்பனையான முல்லைப் பூ ரூ. 700-க்கும் விற்பனையானது. இதேபோல் பிற பூக்களின் விலை விவரம் (கிலோ அளவில்): ஜாதிமல்லி ரூ. 320, செவ்வந்தி ரூ. 320, கோழிக்கொண்டை ரூ. 120, பன்னீா் ரோஜா ரூ. 240, ரோஜா ரூ. 400, கேந்தி ரூ. 140, அரளி ரூ. 400.
தொடர்புடையது

வெடிபொருள் கடைகளை மூட உத்தரவு

சேலம் உழவா் சந்தைகளில் ரூ. 1.17 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

செங்கல்பட்டு பழைய அங்காளம்மன் கோயிலில் பங்குனி உத்திர ருக்கல்யாணம்

தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


