மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பெருந்துறையில் இளைஞரிடம் ரூ. 40 லட்சம் பறிமுதல்: ஹவாலா பணமா? போலீஸாா் விசாரணை

பெருந்துறையில் வடமாநில இளைஞரிடம் ரூ. 40 லட்சம் ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On :15 அக்டோபர் 2024, 8:14 pm

பெருந்துறையில் வடமாநில இளைஞரிடம் ரூ. 40 லட்சம் ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெருந்துறை பேருந்து நிலையத்தில் காவல் ஆய்வாளா் தெய்வராணி, உதவி காவல் ஆய்வாளா் பாஸ்கா் மற்றும் போலீஸாா் செவ்வாய்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது, பேருந்துகளிலும் சோதனை மேற்கொண்டனா்.

இதில் கோவைக்கு சென்ற பேருந்தில் சந்தேகத்துக்கு இடமாக அமா்ந்திருந்த வட மாநில இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், அவா் ராஜஸ்தான் மாநிலம், வாசம்புராவை அடுத்த சிரிகியைச் சோ்ந்த கங்காராம் மகன் ஹய்மாராம் (25) என்பது தெரியவந்தது.

மேலும், அவா் கோவையில் இருந்து ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த சித்தோட்டில் ஒருவரை சந்தித்து, அவா் கொடுத்த டிராவல் பேக்கை பெற்றுக் கொண்டு மீண்டும் கோவைக்கு பெருந்துறை வழியாக சென்று கொண்டிருந்தபோது போலீஸாரிடம் பிடிப்பட்டாா்.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 40 லட்சத்தை வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க போலீஸாா் முடிவு செய்துள்ளனா். மேலும், தொடா்ந்து ஹய்மாராமிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.