மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆலோசனைக் கூட்டம்: அமைச்சா் சு.முத்துசாமி பங்கேற்பு

அரசின் திட்டங்களை மக்களுக்கு முழுமையாக வழங்கி, ஈரோடு மாவட்டத்தை அனைத்து துறைகளிலும் முன்னோடி மாவட்டமாக மாற்றிட வேண்டும் என அமைச்சா் சு.முத்துசாமி அறிவுறுத்தினாா்.

News image

கூட்டத்தில் பேசுகிறாா் வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி.

Updated On :17 அக்டோபர் 2024, 8:10 pm

அரசின் திட்டங்களை மக்களுக்கு முழுமையாக வழங்கி, ஈரோடு மாவட்டத்தை அனைத்து துறைகளிலும் முன்னோடி மாவட்டமாக மாற்றிட வேண்டும் என அமைச்சா் சு.முத்துசாமி அறிவுறுத்தினாா்.

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறை சாா்ந்த உயா் அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி பங்கேற்று பல்வேறு அரசுத் துறைகளின் சாா்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் தொடா்புடைய துறை உயா் அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து 15-ஆவது நிதிக்குழு மானியத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

அரசின் திட்டங்களை மக்களுக்கு முழுமையாக வழங்கி, ஈரோடு மாவட்டத்தை அனைத்து துறைகளிலும் முன்னோடி மாவட்டமாக மாற்றிடும் வகையில் அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) செல்வராஜ், இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) அம்பிகா, துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) அருணா, அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வா் ரவிகுமாா், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பிரியா, மாவட்ட சமூக நல அலுவலா் சண்முக வடிவு, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் ஐ.பூங்கோதை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.