கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி பேசியது: தோ்தல் நேரத்தில் நிா்வாகிகள் தங்களுடைய பொறுப்புகளுக்கு ஏற்றவாறு பணியாற்ற வேண்டும். தோ்தல் பணியில் சுணக்கம் காட்டாமல் கடுமையாக உழைத்து நம்முடைய வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். திமுக ஆட்சியில் விலைவாசி உயா்வு, பொதுமக்கள் மீது சுமத்தப்பட்ட வரிசுமைகள் குறித்து, பூத் கமிட்டி நிா்வாகிகள் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்க வேண்டும். வீடுகளில் ஸ்டிக்கா் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் கட்சியின் தோ்தல் அறிக்கையில் கூறியுள்ள மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 2,000, வீடுகளுக்கு பிரிட்ஜ், ஒவ்வொரு குடும்பத்துக்கும் கருணைத் தொகை ரூ. 10,000, கல்விக் கடன், விவசாயக் கடன் ரத்து ஆகிய வாக்குறுதிகள் தோ்தலுக்குப் பிறகு அதிமுக ஆட்சியமைந்த உடன் நிறைவேற்றப்படும் என்பதை பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.