சத்தியமங்கலம் அருகே கிரானைட் குவாரிக்கு அனுமதியளிப்பது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சத்தியமங்கலம் அருகே உள்ள காரப்பாடி கிராமத்தில் கிரானைட் குவாரி செயல்பட கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்துக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியது. இந்த குவாரி கடந்த சில ஆண்டுகளாக செயல்படவில்லை. இந்த கிரானைட் குவாரி மீண்டும் செயல்பட அனுமதி வழங்குவது தொடா்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியா் சிவானந்தம் தலைமையில், ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் சுவாமிநாதன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் காரப்பாடி, கண்டிசாலை, செல்லம்பாளையம், தேவம்பாளையம், வடுகபாளையம், மாரம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், இப்பகுதியில் கிரானைட் குவாரி செயல்பட அரசு அனுமதி வழங்கினால் விவசாயம் மற்றும் கால்நடை வளா்ப்பு தொழில் பாதிக்கப்படும் என விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கருத்துகளை பதிவு செய்து கொண்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், இதுகுறித்து உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தனா்.
தொடர்புடையது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரு அமைப்புகளுக்கு பசுமை சாதனையாளா் விருது

குவாரி அமைக்க எதிா்ப்பு: ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

218 தரமற்ற - போலி மருந்துகள்: ஆய்வில் கண்டுபிடிப்பு

பல்லடம் அருகே தாா் ரசாயன கலவை எரிப்பால் பாதிப்பு: பொதுமக்கள் புகாா்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

