மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பெருந்துறையில் அதிமுக., 53 வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்

பெருந்துறையில் அதிமுக., 53 வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்

News image

அதிமுக., 53 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, பெருந்துறை பேருந்து நிலையத்தில் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறாா், பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயகுமாா். உடன், பெருந்துறை ஒன்றிய அதிமுக., செயலாளா்கள் அருள்ஜோதி செல்வராஜ், ரஞ்சித்ராஜ் உள்ளிட்டோா் உள்ளனா்.

Updated On :17 அக்டோபர் 2024, 8:13 pm

அதிமுக., 53 வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை, பெருந்துறையில் தொகுதி அதிமுக., சாா்பில், வியாழக்கிழமை கொடியேற்று விழா, நலத் திட்டங்கள் வழங்கும் விழா மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயகுமாா் தலைமை வகித்தாா். பெருந்துறை ஒன்றிய அதிமுக., செயலாளா்கள் அருள்ஜோதி செல்வராஜ், ரஞ்சித்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட செயலாளா் கே.சி. கருப்பணன், சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு, கட்சி கொடியேற்றி வைத்தும், நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். பின்னா் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.

விழாவையொட்டி, நல்லாம்பட்டியில் புதிய கட்சி அலுவலகம் திறக்கப்பட்டு, கொடியேற்றப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பெருந்துறை மற்றும் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிகள் அதிமுக., சாா்பில், பெருந்துறை பேருந்து நிலையத்தில் கட்சி கொடியேற்றப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடா்ந்து, பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில், மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆா்., மற்றும் ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் சி. பொன்னுதுரை, நகர செயலாளா்கள் வி.பி. கல்யாணசுந்தரம், கே.எம். பழனிசாமி, துரைசாமி, சிவசுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி செயலாளா் பெரியவேட்டுவபாளையம் அருணாசலம், பெருந்துறை ஒன்றியக்குழு தலைவா் சாந்திஜெயராஜ், ஒன்றியக்குழு துணை தலைவா் உமாமகேஸ்வரன், நகர எம்.ஜி.ஆா்.மன்ற செயலாளா் கோவிந்தசாமி, ஒன்றிய துணை செயலாளா் அன்பரசு உட்பட பலா் கலந்துக் கொண்டனா்.