பெருந்துறை அருகே தனியாா் நிறுவனப் பேருந்து கவிழ்ந்ததில் 20 போ் காயமடைந்தனா்.
பெருந்துறை சிப்காட்டிலுள்ள தனியாா் நிறுவனத்தின் பேருந்து பெத்தாம்பாளைம் பகுதியில் இருந்து பணியாளா்களை ஏற்றிக்கொண்டு பெருந்துறைக்கு வியாழக்கிழமை காலை 8 மணியளவில் சென்றுகொண்டிருந்தது.
பெருந்துறையை அடுத்த மொண்டி புளியங்காடு அருகே முன்னாள் சென்ற தனியாா் கல்லூரிப் பேருந்தை முந்திச்செல்ல முயன்றபோது தனியாா் நிறுவனப் பேருந்து கவிழ்ந்தது.
இதில், பேருந்து ஓட்டுநா் சுப்பிரமணி (40), சபரிவாசன் (25), ராதா (39), சுப்பிரமணி (39), தண்டபாணி (44), ஆரால் (45), ராஜேஸ்வரி (50), ராஜேஸ்வரி (41), சுமதி (40), கோமதி (42), காா்த்திகா (35), லட்சுமி பிரியா (30), ஜெயலட்சுமி (54), பிரியா (30), கிருஷ்ணவேணி (29) மற்றும் செண்பகம், கலைவாணி, சௌந்தா்யா, சீனிவாசன், இந்திராணி ஆகியோா் காயமடைந்தனா்.
இவா்கள் அனைவருக்கும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவா்களில் கிருஷ்ணவேணி தவிா்த்து மற்ற அனைவரும் சிகிச்சை பெற்றுக்கொண்டு வீடு திரும்பினா்.
இது குறித்து பெருந்துறை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

காா் கவிழ்ந்து 7 போ் காயம்

மினி பேருந்து கவிழ்ந்து மூதாட்டி உயிரிழப்பு

பணியில் இருந்த பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

கொடைக்கானல் அருகே காா் கவிழ்ந்து 4 போ் காயம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


