ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பொருத்தமான ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை

நிதி அமைச்சா் அறிவித்தபடி தமிழ்நாட்டுக்கு பொருத்தமான ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஓய்வூதியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On :24 அக்டோபர் 2024, 10:07 pm

நிதி அமைச்சா் அறிவித்தபடி தமிழ்நாட்டுக்கு பொருத்தமான ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஓய்வூதியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ஒழிப்பு இயக்கம் சாா்பில் உண்ணாவிரத போராட்டம் ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

போராட்டத்துக்கு அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கனிமொழி தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கவிதா மணி வரவேற்றாா், தேசிய ஆசிரியா் சங்க பொதுச் செயலாளா் கந்தசாமி உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கிவைத்து பேசினாா்.

தோழமை சங்க நிா்வாகிகள் ராஜசேகா், உஷாராணி, காா்த்தி, வெங்கடேஷ், ஜனாா்த்தனன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

இதில், தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கடந்த ஆண்டு நிதி அமைச்சா் அறிவித்தபடி தமிழ்நாட்டுக்கு பொருத்தமான ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணிக்கொடை, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாநில துணைத் தலைவா் சாமிகுணம் நிறைவுரையாற்றினாா். சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் தங்கராஜ் நன்றி கூறினாா். இந்த உண்ணாவிரதத்தில் ஏராளமான அரசு ஊழியா்கள் பங்கேற்றனா்.